/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சொந்த ஊர் புறப்பட்ட வட மாநில தொழிலாளர்
/
சொந்த ஊர் புறப்பட்ட வட மாநில தொழிலாளர்
ADDED : ஏப் 10, 2024 01:56 AM
ஈரோடு:லோக்சபா தேர்தல் தேதி நெருங்கும் நிலையில், சொந்த ஊருக்கு புறப்பட்ட வட மாநில தொழிலாளர்களால், ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் கூட்டம் அதிகரித்தது.
ஈரோடு மாவட்டத்தில் மாநகர் மட்டுமின்றி புறநகர், சிப்காட் உள்ளிட்ட கிராமப்புற பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். குறிப்பிட்ட கால இடைவெளியில் சொந்த ஊர் சென்று திரும்புவர். வரும், 19ல் லோக்சபா தேர்தல் நடக்கிறது. தேர்தலில் ஓட்டு போடவும், பிரசாரத்தில் ஈடுபடவும் சொந்த ஊருக்கு ரயிலில் செல்ல தொடங்கியுள்ளனர். இதன்படி நுாற்றுக்கணக்கானோர் மூட்டை முடிச்சுகளுடன் ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் நேற்று குவிந்தனர். வரும் நாட்களில் சொந்த ஊர் செல்லும் வட மாநில தொழிலாளர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது. இதனால் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டு, ஆலைகளில் தயாரிப்பு பணி பாதிக்கும் என்றும், உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

