ADDED : செப் 16, 2024 03:02 AM
ஈரோடு: விடுமுறை தினமான நேற்று வழக்கம்போல், ஈரோடு இ.வி.என்.சாலை மீன் மார்க்கெட்டுக்கு, தமிழகம் மற்றும் கேரள மாநில பகுதிகளில் இருந்து, 25 டன் மீன்கள் வரத்தானது. வாடிக்கையாளர்களை எதிர்பார்த்து வியாபாரிகள் காத்திருந்தனர். ஆனால் குறைந்த எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் மட்டுமே
வந்தனர்.
ஏனெனில் ஈரோடு மாநகர் மட்டுமின்றி மாவட்டத்தில் பல்வேறு கோவில்களில், நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது.
ஓணம் பண்டிகை என்பதாலும் மீன் வாங்க கேரள மாநிலத்தவர்களும் ஆர்வம் காட்டவில்லை. வழக்கமான மீன் பிரியர்கள் மட்டும் மீன்களை வாங்கி சென்றனர். இதனால் எதிர்பார்த்த வியாபாரமின்றி வியாபாரிகள் ஏமாற்றம்
அடைந்தனர்.
மீன்களின் விலை விபரம் (கிலோ-ரூபாயில்): வஞ்சிரம்--1,100, கடல்பாறை-550, கனவா-400, கடல் அவுரி-700, சங்கரா- 400,
வெள்ளை வாவல்-900, கருப்பு வாவல்-800, கடல் பாறை-550, முரல்-450, விலாங்கு-500, டியானா-700, மயில்-750, இறால்-700, ப்ளூ நண்டு-700, மத்தி-300, ஆயிலை-250, தேங்காய் பாறை-550, திருக்கை-600, கொடுவா- 700, சால்மோன்-900,
கிளி மீன்-650.

