sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ரோட்டுலயே...! 'ரூட்' பஸ்சை நிறுத்துறாங்க... டவுன் பஸ்சை திருப்புறாங்க... ரயில்வே கேட்டும் போடுறாங்க... மக்கள் என்னதா பண்ணுவாங்க ?

/

ரோட்டுலயே...! 'ரூட்' பஸ்சை நிறுத்துறாங்க... டவுன் பஸ்சை திருப்புறாங்க... ரயில்வே கேட்டும் போடுறாங்க... மக்கள் என்னதா பண்ணுவாங்க ?

ரோட்டுலயே...! 'ரூட்' பஸ்சை நிறுத்துறாங்க... டவுன் பஸ்சை திருப்புறாங்க... ரயில்வே கேட்டும் போடுறாங்க... மக்கள் என்னதா பண்ணுவாங்க ?

ரோட்டுலயே...! 'ரூட்' பஸ்சை நிறுத்துறாங்க... டவுன் பஸ்சை திருப்புறாங்க... ரயில்வே கேட்டும் போடுறாங்க... மக்கள் என்னதா பண்ணுவாங்க ?


ADDED : ஆக 05, 2024 06:58 AM

Google News

ADDED : ஆக 05, 2024 06:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அயோத்தியாப்பட்டணம்: அயோத்தியாப்பட்டணத்தில் உள்ள உளுந்துார்பேட்டை நெடுஞ்-சாலையிலேயே, 'ரூட்' பஸ்கள் நிறுத்தப்பட்டு பயணியர்

ஏற்றி இறக்கப்படுகின்றனர். அதே சாலையில் டவுன் பஸ்களை திருப்பும் இடமாக பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு புறம்

என்றால் அங்குள்ள ரயில்வே கேட் அடிக்கடி போடப்படுவதால் போக்குவரத்து நெரிசல், விபத்துகள் என்பது தொடர்கதையாக மாறி தினமும் மக்கள் அவதிக்கு ஆளாகி வரு-கின்றனர்.

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் பகுதி, அரூர் நெடுஞ்சாலை, உளுந்துார்பேட்டை நெடுஞ்சாலை பிரிவு பகு-திக்கு மையமாக உள்ளது. அந்த அயோத்தியாப்பட்டணம் வழியே சென்னை, விழுப்புரம், புதுச்சேரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கும், தினமும் ஏராளமானோர் சென்று வருகின்-றனர். அப்பகுதிகளுக்கு அரசு, தனியார் பஸ்களும் அந்த வழி-யேதான் இயக்கப்படுகின்றன.

சேலம், வாழப்பாடி, அக்ரஹார நாட்டாமங்கலம், ஆச்சாங்குட்-டப்பட்டி, வலசையூர், பெரியகவுண்டாபுரம், வெள்ளாளகுண்டம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளுக்கும், அந்த வழியே டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அப்பகுதிகளில் பள்ளி, கல்லுா-ரிகள் உள்ளதால் மாணவ, மாணவியர் அதிகளவில் செல்கின்-றனர். தொழிற்சாலைகளும் உள்ளதால் அந்த வழியே தினமும் ஏராளமானோர் வேலைக்கு செல்கின்றனர். இதுதவிர பல்வேறு தேவைக்கும் அந்த வழியே தினமும் பலர் சென்று வருகின்-றனர்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் பஸ் ஸ்டாண்ட் இல்லை. இதனால் சரியான இடத்தில் பஸ்களும்

நிறுத்தப்படுவதில்லை. குறிப்பாக அயோத்தியாப்பட்டணத்தில் உளுந்துார்பேட்டை நெடுஞ்சாலையிலேயே, 'ரூட்' பஸ்களை, அதன் டிரைவர்கள் நிறுத்தி, பயணியரை ஏற்றி, இறக்கிவிடுகின்-றனர். இதனால் அந்த பஸ்களை தொடர்ந்து வரும், இரு, நான்கு சக்கரம் உள்ளிட்ட அனைத்து வாகனங்கள் வரிசைகட்டி காத்தி-ருக்கும் நிலை தினமும் நடக்கிறது.

அத்துடன் சேலம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து அயோத்-தியாப்பட்டணத்துக்கு இயக்கப்படும் டவுன் பஸ்கள், அங்கு பய-ணியரை இறக்கிவிட்ட பின், அந்த நெடுஞ்சாலையிலேலே பஸ்-களை திருப்பும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் பஸ்களை நிறுத்த இடமின்றி, சாலையோரம் பயணியர் நிற்கும் இடத்திலேயே பஸ்சை நிறுத்துகின்றனர். இதனால் பயணியர் அவதிக்கு ஆளாகின்றனர். சில நேரங்களில் பஸ்களை நெடுஞ்சா-லையில் திருப்ப முடியாமல் டிரைவர்களும் சிரமத்துக்கு ஆளா-கின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்ப-டுவது என்பது வாடிக்கையாகி, தினமும் வாகன ஓட்டிகளின் அவதி என்பதும், தொடர்கதையாகவே மாறிவிட்டது.

இது ஒருபுறம்தான் என்றாலும், அயோத்தியாப்பட்டணம் பஸ் ஸ்டாப் அருகே, அரூர் செல்வதற்கு திரும்ப வேண்டிய முனையில் உள்ள ரயில்வே கேட் அடிக்கடி போடப்படுவதால், அனைத்து வாகன ஓட்டிகளும் ரயில் செல்லும் வரை காத்திருக்க வேண்டிய அவதிக்கு தள்ளப்படுகின்றனர். இதனால் அங்கு மட்-டுமின்றி, உளுந்துார்பேட்டை நெடுஞ்சாலையிலும் போக்குவ-ரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் வரிசை கட்டி சிரமத்-துக்கு ஆளாகின்றனர்.

கேட்டின் மற்றொரு புறமும், அரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சேலம் நோக்கி வரும் வாகன ஓட்டிகளும் காத்திருந்து போக்குவரத்து நெரிசல் என்பது வாடிக்கையாகவே உள்ளது. இதனால் அப்பகுதியில் பஸ்களை நிறுத்துவதற்கு பஸ் ஸ்டாண்ட் என்பது அவசியமாக உள்ளது. அதேநேரம் அடிக்கடி கேட் போடப்படுவதால், ரயில்வே மேம்பாலமும் கட்ட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறு-கையில், 'ரயில்வே பாலம் அமைப்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்ய வேண்டும். ரயில்வே மேம்பால தேவை இருப்பின், மக்கள் கோரிக்கையை, உயர் அதிகாரியிடம் தெரி-வித்து அப்பகுதியில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

அ.தி.மு.க.,வை சேர்ந்த, ஏற்காடு எம்.எல்.ஏ., சித்ரா கூறுகையில், ''முதலில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்-படும். தொடர்ந்து பஸ் ஸ்டாண்ட் குறித்து ஆய்வு செய்து நடவ-டிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.

அயோத்தியாப்பட்டணம் ஒன்றியத்தில், 32 ஊராட்சிகள் உள்ளன. ஏற்காடு சட்டசபை தொகுதியில் அதிக ஊராட்சிகளை கொண்ட பெரிய ஒன்றியம் இது. இங்கு பஸ் ஸ்டாண்ட் இல்லாததால் டவுன் பஸ்கள் நெடுஞ்சாலையோரங்களில் நிறுத்தப்படுகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள், போக்குவரத்து நெரிசல் ஏற்படு-வது வாடிக்கையாகிவிட்டது. குறிப்பாக நெடுஞ்சாலையோரம் டவுன் பஸ்களை நிறுத்துவதால், பயணியர் பஸ்சுக்கு காத்திருக்க கூட உரிய இடம் இல்லாத நிலை காணப்படுகிறது. மேலும் மற்ற வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுகிறது.

- எம்.ஜெயபிரகாஷ், 38 விவசாயி, ராமலிங்கபுரம்.

அயோத்தியாப்பட்டணம் வழியே தினமும், 700 பஸ்கள் வரை செல்கின்றன. இருப்பினும் முறையான ஸ்டாப் இல்லை. நெடுஞ்-சாலையில் ஆத்துார் நோக்கி செல்லும் பஸ்கள் ஒரு இடம், ஆத்-துாரில் இருந்து சேலம் நோக்கி வரும் பஸ்கள் மற்றொரு இடம், அதேபோல் அரூரில் இருந்து சேலம் நோக்கி வரும் பஸ்கள் ஒரு இடம், சேலத்தில் இருந்து அரூர் நோக்கி செல்லும் பஸ்கள் இன்-னொரு இடம் என, 4 இடங்களில் நிறுத்தி பயணியரை ஏற்றுகின்-றனர். ஆங்காங்கே பஸ்களை நிறுத்துவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. பஸ் ஸ்டாண்ட் கட்ட வேண்டும்.

- ஜி.தணிகைவேலன், 36,

கன்சல்டிங் பணியாளர், மாசிநாயக்கன்பட்டி.

தினமும் பலமுறை ரயில்வே கேட் போடப்படுகிறது. இந்த வழியே அதிகளவில் வாகனங்கள் செல்வதால், குறைந்த நேரத்தில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்-லுாரி, வேலைக்கு செல்வோர், தாமதமாக செல்லும் நிலை உள்-ளது. இந்த வழியே செல்லும் தனியார் பஸ்கள், போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்வதால், தாமதம் ஏற்பட்ட பின் அவர்கள் வேகமாக ஓட்டிச்செல்கின்றனர். இது விபத்துக்கு வழிவகுக்கி-றது. மேம்பாலம் கட்ட வேண்டும்.

- பி.தமிழரசன், 30,

சரக்கு வாகன டிரைவர், அயோத்தியாப்பட்டணம்.

ரயில்வே கேட் போடும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படு-வது வாடிக்கை. இதனால் அந்த வழியே ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசரமாக செல்லும் வாகனங்கள் கூட நெரிசலில் சிக்கி உரிய நேரத்தில் செல்ல முடியாத நிலை நேரிடுகிறது. இதனால் நோயா-ளிகளை உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்க்க முடியாமல் உயிரிழப்பும் நடக்கிறது. அதேபோல் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், காலையில் ரயில்வே கேட் போடும்போது ஏற்படும் நெரிசலில் சிக்கி தினமும்

தாமதமாக செல்லும் நிலையே நீடிக்கிறது.

- கே.ஆனந்தவேல், 57,

பத்திர எழுத்தர்,அயோத்தியாப்பட்டணம்.






      Dinamalar
      Follow us