/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காளிங்கராயன் பாசனத்துக்கு நீர் திறப்பு
/
காளிங்கராயன் பாசனத்துக்கு நீர் திறப்பு
ADDED : ஆக 18, 2024 02:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானிசாகர்: பவானிசாகர் அணையில் இருந்து, கீழ்பவானி வாய்க்காலில், தண்ணீர் திறக்கப்பட்டது. நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
நேற்று காலை, 10:00 மணி முதல் காளிங்கராயன் பாசனத்துக்கு, 400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து அரக்கன் கோட்டை-தடப்பள்ளி பாசனத்திற்கு, 800 கன அடி தண்ணீர்; கீழ்பவானி வாய்க்காலில், 800 கன அடி தண்ணீர், குடிநீருக்காக, 100 கன அடி என, 2,100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. நேற்று மாலை நிலவரப்படி அணை நீர்வரத்து வினாடிக்கு, 2,042 கன அடியாக இருந்தது. அணை நீர்மட்டம், 96.96 அடி; நீர் இருப்பு, 26.4 டி.எம்.சி.,யாக இருந்தது.