/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கீழ்பவானி வாய்க்காலில் ஆக., 15ல் தண்ணீர் திறப்பு; அமைச்சர் உறுதி
/
கீழ்பவானி வாய்க்காலில் ஆக., 15ல் தண்ணீர் திறப்பு; அமைச்சர் உறுதி
கீழ்பவானி வாய்க்காலில் ஆக., 15ல் தண்ணீர் திறப்பு; அமைச்சர் உறுதி
கீழ்பவானி வாய்க்காலில் ஆக., 15ல் தண்ணீர் திறப்பு; அமைச்சர் உறுதி
ADDED : ஜூலை 26, 2024 02:47 AM
புளியம்பட்டி: பவானிசாகர் பகுதியில் எரங்காட்டூர், வாய்க்கால்புதூர் வழியாக செல்லும் கீழ்பவானி வாய்க்காலில் நடந்து வரும் சீரமைப்பு பணிகளை, அமைச்சர் முத்துசாமி நேற்று ஆய்வு மேற்-கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:
நீதிமன்ற வழிகாட்டுதலின்படி கீழ்பவானி வாய்க்காலில் சீர-மைப்பு பணி நடந்து வருகிறது. தற்போது, 70 சதவீத பணி முடிந்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். 30 சதவீத பணிகளை விரைவாக முடித்து விடுவோம் எனவும் தெரிவித்துள்ளனர். கீழ்ப-வானி வாய்க்காலில் திட்டமிட்டபடி ஆக., ௧5ம் தேதி தண்ணீர் திறப்பதற்கான முன்னேற்பாடு தீவிரமாக நடந்து வருகிறது. ஆக.,10க்குள் கட்டுமான பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
ஆன்லைனில் வீடு கட்டுவதற்கு அனுமதி வழங்கும் திட்டத்-துக்கு மக்களிடையே வரவேற்பு உள்ளது. தனியார் நிறுவனங்கள் மூலம் ஆன்லைனில் மது விற்கும் திட்டம் அரசிடம் இல்லை. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் கட்டிய அடுக்குமாடி குடியிருப்புக-ளுக்கு, சரியான திட்டமிடல் இல்லாததால், தேவையான வடிகால், குடிநீர் இணைப்பு வழங்குவதில் பிரச்னை உள்ளது. அது விரைவில் சரி செய்யப்படும், இவ்வாறு அமைச்சர் கூறினார்.
இதேபோல் பெருந்துறை பகுதியில் நடக்கும் கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு பணியை, அமைச்சர் முத்துசாமி, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, கொட்டும் மழையில் நேற்று மாலை குடைபிடித்தபடி பார்வையிட்டனர்.
இதன்படி பெருந்துறை - பவானி தேசிய நெடுஞ்சாலை திரு-வாச்சி மற்றும் வாவிக்கடை பகுதியில் மழை நீர் வடிகால் பாலம், பெருந்துறை-ஈரோடு ரோடு வாய்கால்மேடு மழை நீர் வடிகால் பாலம் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தனர்.