/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
துணை மின் நிலையம் அமைக்க எதிர்ப்பு; தாசில்தார் ஆபீஸ் முற்றுகை
/
துணை மின் நிலையம் அமைக்க எதிர்ப்பு; தாசில்தார் ஆபீஸ் முற்றுகை
துணை மின் நிலையம் அமைக்க எதிர்ப்பு; தாசில்தார் ஆபீஸ் முற்றுகை
துணை மின் நிலையம் அமைக்க எதிர்ப்பு; தாசில்தார் ஆபீஸ் முற்றுகை
ADDED : மே 01, 2024 01:54 PM
காங்கேயம்: வெள்ளகோவில் அருகே வேலப்பன்நாயக்கன்வலசு ஊராட்சி, ராகுபையன் வலசு, குருக்குபாளையத்தில் தனியாருக்கு சொந்தமான, 14 ஏக்கர் நிலத்தை தனியார் நிறுவனம் வாங்கியுள்ளது. அதில் துணை மின் நிலையம் அமைக்கவும், இதர கட்டுமான பணிகளும் தற்போது நடந்து வருகிறது.
கரூர் மாவட்டத்தில் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான பல காற்றாலைகளில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தை, ராகுபையன்வலசு துணைமின் நிலையத்துக்கு கொண்டு வந்து, அங்கிருந்து, 20 கி.மீ., துாரத்துக்கு உயர்மின் கோபுரம், மின் பாதை அமைத்து, மூலனுார்- துரம்பாடிக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதற்கு மின் கோபுரம், உயர்மின் பாதை பொதுச்சாலை வழியாகவும், விவசாய நிலங்களின் வழியாக அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணி துவங்கிய முதலே விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஊராட்சி நிர்வாகம், பொதுப்பணி துறையிடம் அனுமதி பெறாமலும் நடந்ததால், தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர். அப்போது நடந்த பேச்சுவார்த்தையில் அனுமதி பெறாமல் பணிகளை தொடங்க மாட்டோம் என உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், தற்போது பணியை தொடங்கியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர், காங்கேயம் தாசில்தார் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பிறகு தாசில்தார் மயில்சாமியிடம் மனு அளித்தனர். உரிய அனுமதி பெற்ற பிறகே பணிகள் நடக்கும் என தாசில்தார் தெரிவிக்கவே, விவசாயிகள் கலைந்து சென்றனர்.