/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கர்நாடகா எல்லையில் கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை தொடர உத்தரவு
/
கர்நாடகா எல்லையில் கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை தொடர உத்தரவு
கர்நாடகா எல்லையில் கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை தொடர உத்தரவு
கர்நாடகா எல்லையில் கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை தொடர உத்தரவு
ADDED : ஏப் 25, 2024 02:26 AM
ஈரோடு:கடந்த, 19ல், தமிழகத்தில் லோக்சபா தேர்தல் முடிந்ததால், 20 முதல் அக்குழுக்கள் கலைக்கப்பட்டன. பொதுமக்களுக்கும், இக்குழுக்களுக்கும் இடையே பாலமாக இருக்கும் வகையில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டது.
கட்டுப்பாட்டு அறையின் போன் எண்கள், 'சி - விஜில் ஆப்'பில் பெறப்படும் புகார்கள் குறித்து, இக்குழுக்களுக்கு தகவல் தெரிவித்து விரைவான நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்நிலையில், தமிழகத்தில் ஓட்டுப்பதிவு முடிந்தாலும் கர்நாடகாவில், இரண்டு கட்டமாக வரும், 26 மற்றும் மே 7ல் தேர்தல் நடக்க உள்ளது. இதனால் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே பண்ணாரி, அந்தியூர் தாலுகா பர்கூர் அருகே கர்நாடகா எல்லையை ஒட்டிய சோதனைச்சாவடி பகுதியில் மட்டும் தலா, ஐந்து நிலை கண்காணிப்பு குழுவினர் சுழற்சி முறையில் பணி செய்கின்றனர்.
இவர்களது செயல்பாட்டை கண்காணிக்கவும், இவர்களுக்காக பெறப்படும் தகவல்களை ஒருங்கிணைக்கவும், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை தேவைப்படுகிறது. கர்நாடகா மாநில தேர்தல் ஓட்டுப்பதிவு நிறைவடையும் வரை, இக்கட்டுப்பாட்டு அறை செயல்படும் என்று, தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.

