/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
100 நாள் வேலை கேட்டு பஞ்., அலுவலகம் முற்றுகை
/
100 நாள் வேலை கேட்டு பஞ்., அலுவலகம் முற்றுகை
ADDED : ஜூலை 12, 2024 01:40 AM
பவானி,
அம்மாபேட்டை யூனியன் குறிச்சி பஞ்சாயத்தில், நுாறு நாள் வேலை திட்டத்தில், 800-க்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர். கடந்த சில நாட்களாக, 400 பேருக்கு மட்டும் தொடர்ந்து வேலை வழங்குவதாகவும், மற்றவர்களுக்கு வேலை வழங்குவதில்லை எனவும், தொழிலாளர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து பி.டி.ஓ.,க்களிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நுாற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், குறிச்சி பஞ்., அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு, பூனாச்சி-பவானி சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர்.
அம்மாபேட்டை போலீசார் சமாதான பேச்சு எடுபடாத நிலையில், அம்மாபேட்டை மண்டல வட்டார வளர்ச்சி அலுலர் சாந்தி பேச்சுவார்த்தைக்கு வந்தார். வேலையில்லாத அனைவருக்கும் வேலை வழங்கப்படும் என உறுதியளிக்கவே, தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.