/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குடிநீர் வேண்டி பஞ்., தலைவர் முற்றுகை
/
குடிநீர் வேண்டி பஞ்., தலைவர் முற்றுகை
ADDED : மே 21, 2024 11:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி: பவானி அருகே உள்ள எலவமலை பஞ்., பட்டக்கார ரங்கநாயக்கனுார், வீர சிவாஜி நகர், பாலக்காடு, செங்கலாப்பாறை பகுதிகளில் மூன்று மாதங்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்டபவில்லை என்று, மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். கடந்த ஒரு வாரமாக குடிநீர் வினியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், எலவமலை பஞ்., அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். அங்கிருந்த தலைவர் வைத்தியநாதனை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக வைத்தியநாதன் உறுதி கூறவே, 30க்கும் மேற்பட்ட மக்கள் கலைந்து சென்றனர்.

