/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பஞ்., வார்டு உறுப்பினர் கணவரின் பைக் எரிப்பு
/
பஞ்., வார்டு உறுப்பினர் கணவரின் பைக் எரிப்பு
ADDED : ஜூலை 19, 2024 01:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே கொழிஞ்சானுாரை சேர்ந்தவர் சரவணன், 51, கூலி தொழிலாளி. இவரின் மனைவி சித்ரா, காங்., கட்சியை சேர்ந்தவர். இக்கரை நெகமம் ஊராட்சி நான்காவது வார்டு உறுப்-பினர். இவர்கள் வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த யமஹா கிரக்ஸ் பைக், நேற்று காலை திடீரென மாயமானது. தேடியபோது சிறிது துாரத்தில் பைக் எரிந்த நிலையில் கிடந்தது. சத்தி போலீசாருக்கு தகவல் தரப்பட்டது. சம்பவ இடத்தில் ஆய்வு செய்த போலீசார், பைக்கை எரித்த ஆசாமியை தேடி வருகின்றனர். பட்டப்
பகலில் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் கணவரின் பைக்கை எரித்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.