தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வ.உ.சி பூங்கா, மத்திய பஸ் ஸ்டாண்டை தனியாருக்கு விட தொடரும் எதிர்ப்பு

வ.உ.சி பூங்கா, மத்திய பஸ் ஸ்டாண்டை தனியாருக்கு விட தொடரும் எதிர்ப்பு

வ.உ.சி பூங்கா, மத்திய பஸ் ஸ்டாண்டை தனியாருக்கு விட தொடரும் எதிர்ப்பு


ADDED : செப் 26, 2026 06:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2026 06:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு;ஈரோடு வ.உ.சி., பூங்கா, மத்திய பஸ் ஸ்டாண்ட் ஆகியவற்றில் தனியாருக்கு இடமளிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம், மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், 25 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

வ.உ.சி., பூங்கா மற்றும் மத்திய பஸ் ஸ்டாண்டில், மக்கள்-தனியார் பங்களிப்பு முறையில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகள் குறித்து, தனியார் நிறுவனத்தினர் எடுத்துரைத்தனர். இதற்கு கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து திட்டத்தை கைவிட வலியுறுத்தினர்.

இதுகுறித்து கவுன்சிலர்கள் கூறியதாவது: கடந்த மாதம் நடந்த கவுன்சிலர்கள் கூட்டத்தில், வ.உ.சி. பூங்கா வளாகத்தில் உள்ள, 6.40 ஏக்கர் நிலத்தை, 15 ஆண்டுகள் தனியாருக்கு வழங்க வேண்டும். இதற்காக மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் சலுகை கட்டணமாக சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் செலுத்தும் என தெரிவிக்கப்பட்டிருந்து.

இதேபோல் மத்திய பஸ் ஸ்டாண்டில் மூன்று ஏக்கர் நிலத்தை, 45 ஆண்டுகளுக்கு தனியாருக்கு ஒப்படைக்கவும், இதற்காக 2.20 கோடி கட்டணம் செலுத்துவார்கள் என தீர்மானம் கொண்டு வந்தனர். அனைத்து கவுன்சிலர்களும் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானத்தை ரத்து செய்ய வலியுறுத்தியதால் அதிகாரிகள் தீர்மானத்தை ஒத்தி வைத்தனர். இதுதொடர்பாக இன்றும் (நேற்று) எதிர்ப்பு தெரிவித்துள்ளோம்.

வ.உ.சி., பூங்கா, மத்திய பஸ் ஸ்டாண்ட் மூலம் ஏற்கெனவே மாநகராட்சிக்கு அதிக வருமானம் வருகிறது. ஆண்டுக்கு ஒரு லட்சம், இரண்டு கோடி என தனியாருக்கு விடுவதன் மூலம் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இவ்வாறு கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us