/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கனி மார்க்கெட் வணிக வளாகத்தில் பார்க்கிங் கட்டணம் ஓவர்; வியாபாரிகள் மனு

ADDED : மே 08, 2024 02:28 AM
ஈரோடு:ஈரோடு
கனி மார்க்கெட் வணிக வளாக, தினசரி அனைத்து சிறு ஜவுளி வியாபாரிகள்
சங்கத்தினர், மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தியிடம்
அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
மாநகராட்சி கனி மார்கெட்
வணிக வளாகத்தில் கடை நடத்துகிறோம். இங்கு இருசக்கர வாகனத்தில் வரும்
வாடிக்கையாளர்களிடம், 20 ரூபாய், நான்கு சக்கர வாகனத்துக்கு, 50
ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இருசக்கர வாகனத்துக்கான
கட்டணம் அதிகம் என்பதால், பலர் சாலையோர கடைகளுக்கு சென்று
விடுகின்றனர். இதனால் எங்களின் வியாபாரம் பாதிக்கிறது. இதை, ௧௦
ரூபாயாக குறைக்க வேண்டும்.
மேலும், கனி மார்க்கெட் அருகே பழையபடி,
வாடிக்கையாளர் வசதிக்காக, பஸ் நிறுத்தம் அமைக்க வேண்டும். நகரும்
படிக்கட்டை இயங்க செய்ய வேண்டும். வணிக வளாகத்தை சுற்றி போதிய மின்
விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும். கடை வியாபாரிகளுக்கு வாகனம்
பார்க்கிங் செய்ய குறைந்தது ஒரு கடைக்கு இரண்டு பாஸ் இலவசமாக வழங்க
வேண்டும். வணிக வளாக கழிப்பறைகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
குடிநீர் வசதி செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.