ADDED : செப் 11, 2026 06:27 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு,
மத்திய பஸ் ஸ்டாண்டில், மா. கம்யூ., கட்சி சார்பில் மாவட்டக்குழு
உறுப்பினர் சுப்பிரமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட
செயலர் ரகுராமன், நிர்வாகிகள் ராஜ்குமார், கனகராஜ், ஜோதிமணி,
சுந்தர்ராஜன் உட்பட பலர் பேசினர்.
ஈரோடு சோலார் புதிய பஸ்
ஸ்டாண்ட், ஈரோடு மத்திய பஸ் ஸ்டாண்ட் பராமரிப்பை தனியாருக்கு
அனுமதிக்கக்கூடாது. புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், 22 கோடி
ரூபாயில் கட்டப்பட்டு வரும் காய்கறி மார்க்கெட்டை, 15 ஆண்டுக்கு
தனியாருக்கு குத்தகைக்கு வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும்
என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
