தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தற்கொலை தடுப்பு தின மனித சங்கிலி விழிப்புணர்வு

தற்கொலை தடுப்பு தின மனித சங்கிலி விழிப்புணர்வு

தற்கொலை தடுப்பு தின மனித சங்கிலி விழிப்புணர்வு


ADDED : செப் 11, 2026 06:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 11, 2026 06:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மனநல மருத்துவ பிரிவு சார்பில் உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

மாவட்ட இணை இயக்குனர் ஜெயந்தி, முன்னிலை வகித்து, மனித சங்கிலியை ஒருங்கிணைத்தார். தற்கொலை தடுப்பு உறுதிமொழி ஏற்றனர். அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் வெங்கடேஷ், உறைவிட மருத்துவர் சசிரேகா, மாவட்ட தேசிய நலவாழ்வு குழு ஆனந்த், மனநல மருத்துவர்கள் ஜெயச்சந்திரன், ஆனந்த குமார், தீபிகா குமார, ஜெயபிரகாஷ், கவிதா உட்பட பலர் பேசினர்.

'ஏமாற்றத்தை தாங்க முடியாமல், தன்னை முடித்து கொள்ள தற்கொலைக்கு ஆளாகின்றனர். மனம் பாதிக்கும்போது சிந்திக்கும் ஆற்றல் குறையும். தற்கொலை எண்ணத்தை நோயாக கருதி, சிகிச்சை எடுத்து கொள்ளுங்கள். ஒரு நிமிடம் ஒதுக்கி சிந்தித்தால், தற்கொலை எண்ணம் மாறும். சக மனிதர்களிடம் ஏதாவது மாற்றத்தை கண்டால், அவர்களிடம் நெருங்கி சென்று பேசி, அவர்கள் எண்ணத்தை மாற்றுங்கள்' என, டாக்டர்கள் வலியுறுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us