/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோபி நகராட்சி கூட்டத்தில் 30 தீர்மானம் நிறைவேற்றம்
/
கோபி நகராட்சி கூட்டத்தில் 30 தீர்மானம் நிறைவேற்றம்
கோபி நகராட்சி கூட்டத்தில் 30 தீர்மானம் நிறைவேற்றம்
கோபி நகராட்சி கூட்டத்தில் 30 தீர்மானம் நிறைவேற்றம்
ADDED : ஆக 30, 2024 01:02 AM
கோபி, ஆக. 30-
கோபி நகராட்சி மாதாந்திர கூட்டம் கூட்டம், சேர்மன் நாகராஜ், பொறியாளர் சிவக்குமார் தலைமையில் நேற்று நடந்தது. மொத்தம், 29 கவுன்சிலர்கள் பங்கேற்றனர். நகராட்சி பகுதியில் குடிநீர் திட்டப்பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
குப்பைகளை அகற்ற, சாக்கடைகளை துார்வார, துப்புரவு பணியாளர்களை கூடுதலாக நியமிக்க கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். அதிகாரிகள் தரப்பில், 'குடிநீர் திட்டப்பணியாக ஏழு மண்டலத்தில் முடிந்துள்ளது. எஞ்சிய பணிகள் விரைவில்
முடிக்கப்படும்.
துப்புரவு பணியாளர் ஓய்வு பெற்றுள்ளதால், தேவையான பணியாளர் நியமிக்க ஏற்பாடு செய்யப்படும்' என பதிலளித்தனர். கூட்டத்தில், 30 தீர்மானங்கள் நிறை
வேற்றப்பட்டன.