பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 08, 2026 04:45 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு,
காந்திஜி சாலை பி.எஸ்.என்.எல்., பொது மேலாளர் அலுவலகம் முன்,
பி.எஸ்.என்.எல்., ஓய்வூதிய சங்கங்களின் கூட்டமைப்பினர், நேற்று
கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கூட்டமைப்பின்
மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமை வகித்தார். பொதுச்செயலாளர்
குப்புசாமி, துணை செயலாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை
வகித்தனர். இதில், 2026 அக்.,1 முதல் நியாயமின்றி நிறுத்தப்பட்ட
மருத்துவ அலவன்சை தொடர்ந்து வழங்க வேண்டும். ரத்து செய்த உத்தரவை வாபஸ்
பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பி
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நிர்வாகி பழனிசாமி மற்றும்
ஓய்வூதியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
