ADDED : அக் 08, 2026 04:45 AM
அ நிறம் | அளவு
அந்தியூர்:அந்தியூர் அடுத்த தவிட்டுப்பாளையத்தில், மூத்த குடிமக்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது.
ஈரோடு மாவட்ட சட்டப்பணிகள்
ஆணைக்குழு தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி
அறிவுறுத்தலின்படி நடந்த முகாமில், அந்தியூர் வட்ட சட்டப்பணிகள்
குழு பேனல் வக்கீல் விஜய் பங்கேற்று, மூத்த குடிமக்களுக்கான
உரிமைகள், சமூக நல திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
சட்டம் சார் தன்னார்வலர் முத்துகிருஷ்ணன், இலவச சட்ட ஆலோசனை மைய
செயல்பாடுகள் குறித்து விளக்கி துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
