/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சுண்ணாம்பு பள்ளம் ஓடையில் பாயும் கழிவு நீர் தோல் தொழிற்சாலைகளால் மக்கள் அதிர்ச்சி

ADDED : ஜூலை 01, 2024 03:49 AM
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி நான்காவது வார்டுக்கு உட்பட்ட மறவாபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், 15க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் குரோமியம் அதிகமுள்ள ரசாயனங்களை பயன்படுத்தி தோல் பதனிடப்படுகிறது.
இவை தவிர சோடியம் குளோரைடு, சோடியம் சல்பேட், சல்பியூரிக் ஆசிட், குரோமியம் சல்பேட் என, 170-க்கும் மேற்பட்ட ரசாயனங்களை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் தோல் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், சுண்ணாம்பு ஓடை பள்ளத்தில் திறந்து விடப்படுவது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அப்பகுதியினர் கூறியதாவது: சுண்ணாம்பு ஓடை பள்ளத்தில், கீழ்பவானி உபரி நீர் வரும். இதன் மூலம், மறவா பாளையம், அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளில், 1,000 ஏக்கருக்கு மேற்பட்ட விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஆனால், தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால், நிலத்தடி நீர் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும், மாநகராட்சி அதிகாரிகளும் அடிக்கடி கண்காணிப்பு மேற்கொண்டு, சுண்ணாம்பு ஓடை பள்ளத்தில் கழிவுநீரை கலக்கும் தொழிற்சாலைகள் மீது உரிய
நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மக்கள் கூறினர்.