/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குளத்தில் கழிவை கொட்டிய வேனை சிறைபிடித்த மக்கள்
/
குளத்தில் கழிவை கொட்டிய வேனை சிறைபிடித்த மக்கள்
ADDED : ஆக 25, 2024 01:05 AM
குளத்தில் கழிவை கொட்டிய
வேனை சிறைபிடித்த மக்கள்
பெருந்துறை, ஆக. 25-
பெருந்துறை, சிப்காட் பகுதியில், வரப்பாளையம் பஞ்., ஒடைக்காட்டூரில் குளம் உள்ளது. நேற்று முன்தினம் மாலை, வேனில் சாக்கு மூட்டைகளில் கொண்டு வரப்பட்ட பிளாஸ்டிக் பை, கவர்களை, ஒரு ஆசாமி குளத்தில் வீசிக்கொண்டிருந்தார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் வேனுடன் ஆசாமியை சுற்றி வளைத்து, பஞ்., தலைவர் பழனிசாமிக்கு தகவல் கொடுத்தனர். இதுகுறித்து பெருந்துறை போலீசில் அவர் புகார் செய்தார். விசாரணையில் சிப்காட்டில் உள்ள ஒரு ஆலையில் இருந்து கொண்டு வந்த பிளாஸ்டிக் கழிவுகளை, குளத்தில் வீசியது தெரிந்தது. வேன் டிரைவரான பெருந்துறை, வடுகபாளையத்தை சேர்ந்த சபரிநாதன், 30, மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

