/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'சங்க இலக்கியத்தை மக்கள் மீள் வாசிப்பு செய்ய வேண்டும்'
/
'சங்க இலக்கியத்தை மக்கள் மீள் வாசிப்பு செய்ய வேண்டும்'
'சங்க இலக்கியத்தை மக்கள் மீள் வாசிப்பு செய்ய வேண்டும்'
'சங்க இலக்கியத்தை மக்கள் மீள் வாசிப்பு செய்ய வேண்டும்'
ADDED : ஆக 08, 2024 01:59 AM
ஈரோடு, ஈரோடு, சி.என்.கல்லுாரி வளாகத்தில் மக்கள் சிந்தனை பேரவை சார்பில் நடந்து வரும் ஈரோடு புத்தக திருவிழாவில், நேற்று மாலை நேர அரங்கில் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் வரவேற்றார்.
'அணிலாடு முன்றில்' என்ற தலைப்பில் சிந்துவெளி ஆய்வாளர் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன் பேசியதாவது: வாழ்க்கை குறித்து மட்டுமே பேசும் செவ்வியல் இலக்கியம், சங்க இலக்கியம் மட்டுமே. எழுத்துக்கும், சொல்லுக்கும், புணர்ச்சிக்கு இலக்கணம் இருக்கும். ஆனால், பொருளதிகாரம் என்ற பெயரில் வாழ்க்கைக்கு இலக்கணம் எழுதப்பட்ட நுால், சங்க இலக்கியமாகும்.
நம்மில் பெரும்பாலும் சங்க இலக்கியத்தை சரியாக வாசிக்கவில்லை. என் வாழ்நாள் கனவாக, சங்க இலக்கியத்தை மக்கள் மீள் வாசிப்பு செய்ய வேண்டும் என்பதாகும். இது நிகழ்காலத்தை புரிந்து கொள்வதற்காகவும், வருங்காலத்தை காக்கவும் அவசியமாகும். இவ்வாறு பேசினார்.
'அணையா விளக்கு' என்ற தலைப்பில் புதுக்கோட்டை ஞானாலயா பா.கிருஷ்ணமூர்த்தி பேசுகையில்,''ஆழமான வாசிப்பும், அதுபற்றிய சிந்தனையும், தேடலும் அறிவை விசாலமாக்கும். மனதை பண்படுத்தும். மனிதர்களை மனிதாபிமானம் கொண்டவர்களாக மாற்றும். புத்தகங்கள் படிப்பதால் அறிவு புரட்சி ஏற்படுகிறது. உ.வே.சாமிநாத அய்யர், 12 நாளில் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். இதற்கு முன், வேறு மொழி பெயர்ப்பு வந்திருந்தாலும், இதன் சிறப்பு, 80 பக்க முன்னுரையாகும், என்றார்.