/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோவில் உடமைகளை திருடி பகிரங்க விற்பனை ஆதாரங்களுடன் மீண்டும் மனு தந்த மக்கள்
/
கோவில் உடமைகளை திருடி பகிரங்க விற்பனை ஆதாரங்களுடன் மீண்டும் மனு தந்த மக்கள்
கோவில் உடமைகளை திருடி பகிரங்க விற்பனை ஆதாரங்களுடன் மீண்டும் மனு தந்த மக்கள்
கோவில் உடமைகளை திருடி பகிரங்க விற்பனை ஆதாரங்களுடன் மீண்டும் மனு தந்த மக்கள்
ADDED : ஆக 07, 2024 01:59 AM
ஈரோடு, ஆஈரோடு, கள்ளுக்கடை பத்ர காளியம்மன் கோவில் கோபுர கலசம், பித்தளை தகடுகளை மீட்க கோரி, அறநிலையத்துறை இணை ஆணையாளர் பரஞ்ஜோதியிடம், மக்கள் தரப்பில் மீண்டும் மனு அளிக்கப்பட்டுள்ளது. மனு விபரம்: கள்ளுக்கடை மேடு பத்ர காளியம்மன் கோவிலில் திருப்பணிக்காக, நான்கு வாசல் நிலவு கால்களில் இருந்த பித்தளை தகடுகள் கழற்றப்பட்டன. இதை கோவில் அறங்காவலர் தங்காயம்மாளின் பேரன் பிரதீப் எடுத்து சென்று, திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையத்தில் ஒரு கடையில் விற்று விட்டார். இதுகுறித்து ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு புகார் அளித்திருந்தோம். விற்ற பொருட்களில் முக்கியமாக, பத்ர காளியம்மன் கோவில் கோபுர கலசமும் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தோம். இதையடுத்து கடையில் என்னென்ன பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது என்பதை, கடை உரிமையாளரிடமே எழுத்துப்பூர்வமாக கடிதம் பெற்றோம். பொருட்களை விற்ற பில் மற்றும் வீடியோ ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன. இது தொடர்பாக அறநிலையத்துறை ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டார். அறங்காவலர் தங்காயம்மாள், அவரது பேரன்கள் பிரதீப், மதன்ராஜ் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது அறநிலையத்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இணை ஆணையாளர் பரஞ்ஜோதி கூறியதாவது: இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வாளர் ஆதிரை விசாரித்து அறிக்கை சமர்ப்பித்துள்ளார். அதன் அடிப்படையில், பிரதீப் மற்றும் அறங்காவலர் மீது நடவடிக்கை கோரி, ஈரோடு தெற்கு போலீசில் புகாரளித்து, சி.எஸ்.ஆர்., பெறப்பட்டுள்ளது. போலீசார் விரைவில் கோவில் பொருட்களை மீட்டு, கோர்ட்டில் ஒப்படைப்பர். இவ்வாறு அவர் கூறினார்.