/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
புதிய இடங்களில் விநாயகர் சிலை அமைக்க அனுமதி கோரி மனு
/
புதிய இடங்களில் விநாயகர் சிலை அமைக்க அனுமதி கோரி மனு
புதிய இடங்களில் விநாயகர் சிலை அமைக்க அனுமதி கோரி மனு
புதிய இடங்களில் விநாயகர் சிலை அமைக்க அனுமதி கோரி மனு
ADDED : ஆக 13, 2024 05:52 AM
ஈரோடு: இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் முருகேசன் தலைமையில், விநாயகர் சிலைகளை தலையில் வைத்தபடி வந்து, ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம் மனு வழங்கினர்.
மனு விபரம்: செப்.,7ல் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இந்து மக்கள் கட்சி சார்பில், 1.50 லட்சம் இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து, 5 நாட்கள் வழிபாடு நடத்தி, ஊர்வலமாக எடுத்து சென்று, நீர் நிலைகளில் கரைக்கப்படவுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில், 1,008 இடங்களில் வழக்கமாக சிலை வைக்கிறோம். இந்தாண்டும், 1,008 இடங்களில் சிலை அமைக்க திட்டமிட்டு பணி நடந்து வருகிறது. ஆனால், போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தும், புதிய இடங்களில் சிலை வைக்க அனுமதி மறுத்து வருகின்றனர்.
கடந்தாண்டும் இப்பிரச்னையில் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்தனர். விநாயகர் சிலைகளை வைப்பதை தடுக்கக்கூடாது. புதிய இடங்களில் சிலைகள் வைக்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.