/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கீழ்பவானி வாய்க்கால் மதகை சீரமைக்க வலியுறுத்தி மனு
/
கீழ்பவானி வாய்க்கால் மதகை சீரமைக்க வலியுறுத்தி மனு
கீழ்பவானி வாய்க்கால் மதகை சீரமைக்க வலியுறுத்தி மனு
கீழ்பவானி வாய்க்கால் மதகை சீரமைக்க வலியுறுத்தி மனு
ADDED : ஆக 31, 2024 01:49 AM
ஈரோடு: கீழ்பவானி ஒற்றைப்படை நேரடி மதகு ஆயக்கட்டு விவசா-யிகள் சார்பில், ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம், பொன்னையன் தலைமையில் மனு வழங்கினர். மனு விபரம்:
கீழ்பவானி வாய்க்காலில் கடந்த, 15ல் திறக்கப்பட்டு கடை-மடை சென்றுள்ளது. ஆனால், சென்னிமலை யூனியன் பசுவப்-பட்டி கிராமத்தில் பிரதான கால்வாய், மைல்-84/1ல் பாசனம் பெற வேண்டிய ஒற்றைப்படை நேரடி மதகு
முற்றிலும் சிதிலம-டைந்துள்ளது. இந்த மதகு மூலம் பாசனம் பெறும், 156 ஏக்கர் ஆயக்கட்டு நிலங்களுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை.இதுபற்றி ஐந்து மாதங்களாக நீர் வளத்துறை அதிகாரிகளுக்கு மனு வழங்கியும் நடவடிக்கை இல்லை. இப்பகுதியில் மட்டும் நாற்று விடும் பணி தடைபட்டு, 156 ஏக்கர் ஆயக்கட்டு நிலம் பாதித்துள்ளது. எனவே மதகை சீரமைத்து
உடனடியாக தண்ணீர் திறக்க வழி செய்ய வேண்டும்.இவ்வாறு தெரிவித்துள்ளனர்.