/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிறுமிகளை மணந்து பலாத்காரம் வாலிபர் இருவருக்கு 'போக்சோ'
/
சிறுமிகளை மணந்து பலாத்காரம் வாலிபர் இருவருக்கு 'போக்சோ'
சிறுமிகளை மணந்து பலாத்காரம் வாலிபர் இருவருக்கு 'போக்சோ'
சிறுமிகளை மணந்து பலாத்காரம் வாலிபர் இருவருக்கு 'போக்சோ'
ADDED : ஜூலை 24, 2024 10:14 PM
ஈரோடு:சிறுமியை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்ததாக, இரு வாலிபர்கள் மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு, 46 புதுார் பச்சப்பாளியை சேர்ந்த குமார் மகன் தினேஷ், 24, கூலி தொழிலாளி. இவர், ஈரோட்டை சேர்ந்த, 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார். பின்னர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமியின் பெற்றோர் ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரின்படி, போக்சோ சட்டத்தில் தினேஷ் மீது வழக்கு பதிந்தனர்.
அதேபோல், பவானி தளவாய்பேட்டையை சேர்ந்தவர் சக்திவேல், 24, கூலி தொழிலாளி. இவர், பவானியை சேர்ந்த, 15 வயது சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார். பின் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுபற்றி சிறுமியின் பெற்றோர், பவானி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி, சக்திவேலை போக்சோ பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்தனர்.