/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோட்டில் இரண்டாம் நாளாக போலீசார் தபால் ஓட்டுப்பதிவு
/
ஈரோட்டில் இரண்டாம் நாளாக போலீசார் தபால் ஓட்டுப்பதிவு
ஈரோட்டில் இரண்டாம் நாளாக போலீசார் தபால் ஓட்டுப்பதிவு
ஈரோட்டில் இரண்டாம் நாளாக போலீசார் தபால் ஓட்டுப்பதிவு
ADDED : ஏப் 15, 2024 03:27 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பணி செய்யும் காவலர்கள், அவர்களுடன் இணைந்து பணி செய்யும் பிற துறையினருக்கான தபால் ஓட்டு பதிவு செய்யும் பணி, ஈரோடு கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டடத்தில், இரண்டாம் நாளாக நேற்றும் நடந்தது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள போலீசார், தேர்தல் பாதுகாப்பு பணியில் வரும், 18, 19 ல் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் உள்ள மூன்று லோக்சபா தொகுதிகளிலும், பிற இடங்களிலும் பணி செய்கின்றனர். தவிர, பிற மாவட்டங்களில் இருந்து, இங்கு வந்து பணி செய்யும் போலீசார், அவர்களது சொந்த ஊரில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஓட்டளிக்க தபால் ஓட்டு வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
தபால் ஓட்டுப்பதிவுக்கு, 2,154 போலீசார், போலீஸ் அதிகாரிகள் மற்றும் டிரைவர்கள், கண்காணிப்பு குழுவினர் என, 21 பேர் என, 2,175 பேர் தபால் ஓட்டுப்பதிவு செய்ய விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான தபால் ஓட்டுப்பதிவு, ஈரோடு கலெக்டர் அலுவலகம் கூடுதல் கட்டடத்தில் நேற்று முன்தினமும், இரண்டாவது நாளாக நேற்றும் நடந்தது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தபால் ஓட்டு பதிவு செய்ய வந்த போலீசாருக்கு, டோக்கன் வழங்கி, வரிசையில் நின்று தங்கள் ஓட்டை பதிவு செய்து, பெட்டியில் போட்டு சென்றனர். இவர்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் பணி செய்து, தேர்தல் பணியாற்றும் பிற லோக்சபா தொகுதியை சேர்ந்தவர்களும் தபால் ஓட்டுப்பதிவு செய்தனர். முதல் நாளில் போலீசார், 1,460 பேர், கலெக்டர் அலுவலகத்தினர், 739 பேர் என, 2,199 பேர் தபால் ஓட்டை பதிவு செய்துள்ளனர். மீதி போலீசார், பிற பணியாளர் நேற்று தபால் ஓட்டு போட்டனர்.

