/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பெண் சாவில் சந்தேகம் போலீசார் விசாரணை
/
பெண் சாவில் சந்தேகம் போலீசார் விசாரணை
ADDED : ஆக 16, 2024 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி, கவுந்தப்பாடி அருகே ராமசாமிக்கவுண்டர் வீதியை சேர்ந்தவர் அபுசேன், 28, கார் மெக்கானிக்; இவரது மனைவி ரிஜ்வானா, 20; நேற்று முன்தினம் மாலை ரிஜ்வானா வீட்டில் துாக்கிட்டு கொண்டதாக, அபுசேனின் தந்தை நுார் அலி, ரிஜ்வானா பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.
அவரின் பெற்றோர் அங்கு சென்றபோது ரிஜ்வானா இறந்து கிடந்தார். மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக, அவரின் தாய் பர்காத் பானு புகாரின்படி, கவுந்தப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.