/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குட்டையில் மிதந்த சடலம் போலீசார் விசாரணை
/
குட்டையில் மிதந்த சடலம் போலீசார் விசாரணை
ADDED : மே 30, 2024 12:57 AM
புன்செய்புளியம்பட்டி, புன்செய்புளியம்பட்டி, குட்டையில் ஆண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
புன்செய்புளியம்பட்டி, தோட்டசாலை அருகே தடுப்பணையை ஒட்டி குட்டை உள்ளது. சமீபத்தில் பெய்த மழையால், குட்டையில் தண்ணீர் தேங்கியுள்ளது. நேற்று காலை, 40 வயது மதிக்கத்தக்க, அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதை கண்ட அப்பகுதி விவசாயிகள், புன்செய்புளியம்பட்டி போலீசாருக்கு தகவல் தந்தனர்.
அங்கு வந்த போலீசார், குட்டையில் உடல் அழுகிய நிலையில் மிதந்த, ஆண் சடலத்தை மீட்டு, சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஐந்தரை அடி உயரத்தில் உள்ள நபர், நேவி புளு நிற டிசர்ட் மற்றும் நீல நிற பேன்ட் அணிந்துள்ளார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்தும், கொலையா, தற்கொலையா என புன்செய்புளியம்பட்டி போலீசார்
விசாரிக்கின்றனர்.