/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
235 பவுன் நகை திருட்டு தகவல் கசிவதால் போலீசார் அதிர்ச்சி
/
235 பவுன் நகை திருட்டு தகவல் கசிவதால் போலீசார் அதிர்ச்சி
235 பவுன் நகை திருட்டு தகவல் கசிவதால் போலீசார் அதிர்ச்சி
235 பவுன் நகை திருட்டு தகவல் கசிவதால் போலீசார் அதிர்ச்சி
ADDED : ஜூன் 28, 2024 01:08 AM
ஈரோடு, ஈரோடு ஆடிட்டர் வீட்டில், 235 பவுன் நகை திருட்டு போன சம்பவத்தில், ஈரோட்டை சேர்ந்த திருட்டு கும்பலுக்கு தொடர்பிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
ஈரோடு, சூரம்பட்டி, என்.ஜி.ஜி.ஓ.காலனி ஏழாவது வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணி, 69; ஆடிட்டர். இவரின் வீட்டில் கடந்த, 8ம் தேதி இரவில் புகுந்த ஆசாமிகள், 235 பவுன் நகை, 48 லட்சம் ரூபாயை திருடி சென்றனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது: ஈரோட்டை சேர்ந்த திருட்டு கும்பலுக்கு இந்த திருட்டில் மறைமுக தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். ஈரோடு போலீசாரின் நடவடிக்கை, போலீசார் சந்தேகிக்கும் நபருக்கு உடனுக்குடன் தெரிய வருகிறது.
ஆனாலும் ஈரோட்டை சேர்ந்த திருட்டு கும்பலை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். விரைவில் குற்றவாளியை கைது செய்வோம். இவ்வாறு போலீசார் கூறினர்.