/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
போர்வெல்லில் சாயக்கழிவு நீர் ஆலை மின் இணைப்பு 'கட்'
/
போர்வெல்லில் சாயக்கழிவு நீர் ஆலை மின் இணைப்பு 'கட்'
போர்வெல்லில் சாயக்கழிவு நீர் ஆலை மின் இணைப்பு 'கட்'
போர்வெல்லில் சாயக்கழிவு நீர் ஆலை மின் இணைப்பு 'கட்'
ADDED : ஜூன் 25, 2024 02:28 AM
ஈரோடு: ஈரோடு வில்லரசம்பட்டி, ஒண்டிக்காரன்பாளையம் பகுதி வீடுகளில், ஒரு வாரமாக போர்வெல்லில் சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு நிறத்தில் சாயக்கழிவு நீர் வந்தது.
துர்நாற்றமும் வீசியதால், குடிக்க பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதுபற்றிய புகாரால் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர், மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அப்பகுதி வீடுகள், குடியிருப்புகளை சுற்றியுள்ள சாய, சலவை, பிரிண்டிங் ஆலைகளில் சோதனை நடத்தினர்.
வில்லரசம்பட்டியில் ஒரு பிரிண்டிங் ஆலை, கழிவு நீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றியது கண்டறிந்தனர். சென்னை மாசுகட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்துக்கு அறிக்கை அனுப்பினர். அவர்களின் உத்தரவுப்படி, பிரிண்டிங் ஆலையின் மின் இணைப்பை நேற்று துண்டித்தனர். ஒண்டிக்காரன்பாளையம் பகுதியில் உள்ள ஆலைகளில் நேற்று ஆய்வு செய்தனர்.