/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வங்கியாளர்களுக்கு விருதுகள் வழங்கல்
/
வங்கியாளர்களுக்கு விருதுகள் வழங்கல்
ADDED : ஆக 30, 2024 04:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: வங்கியாளர்களுக்கான மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் ஈரோட்டில் நடந்தது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்து பேசினார். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராஜ்குமார் வர-வேற்றார்.
ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, கனரா வங்கிக்கு மாவட்ட அளவில் சிறந்த வங்கிக்கான விருதும், சிறந்த வங்கி கிளைக்கான விருது மற்றும் ரொக்கப்பரிசும் அந்தியூர் கிளை கனரா வங்கி, பெரியபுலியூர் தொடக்க கூட்டுறவு வங்கி, மாணிக்-கம்பாளையம் கிளை தொடக்க கூட்டுறவு வங்கிக்கும் வழங்கப்-பட்டது. மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் பிரியா, தாட்கோ மாவட்ட மேலாளர் அர்ஜூன், வாழ்ந்து காட்டுவோம் மாவட்ட செயல் அலுவலர் சதீஸ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.