ADDED : ஜூலை 08, 2024 07:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு : ஈரோடு இ.வி.என். சாலை ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட்-டிற்கு கேரளா, துாத்துக்குடி, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, காரைக்கால், நாகபட்டினம் பகுதிகளில் இருந்து, 25 டன் மீன் நேற்று வரத்தானது.
மீன் பிடி தடைக்காலம் நிறைவு பெற்ற நிலையில் வரத்து அதிக-ரித்தாலும், விலையும் உயர்ந்து காணப்பட்டது. நேற்றைய விலை விபரம் (கிலோ-ரூபாயில்): கடல் அவுரி-700, வஞ்சரம்-1,200, வெள்ளை வாவல்-900, கருப்பு வாவல்-800, கடல் பாறை-550, முரல்-400, விளாமீன்-600, டியூனா-800, மயில்-700, புளு நண்டு-700, தேங்காய் பாறை-650, கொடுவா-750, கிளி மின்-650, சால்மோன்-900.