/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வாகனங்களில் வலம் வந்து பரபரப்புடன் ஓய்ந்த பிரசாரம்
/
வாகனங்களில் வலம் வந்து பரபரப்புடன் ஓய்ந்த பிரசாரம்
வாகனங்களில் வலம் வந்து பரபரப்புடன் ஓய்ந்த பிரசாரம்
வாகனங்களில் வலம் வந்து பரபரப்புடன் ஓய்ந்த பிரசாரம்
ADDED : ஏப் 18, 2024 01:30 AM
ஈரோடு,  ஈரோடு லோக்சபா தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில், பெரும்பாலானவர்கள் நேற்று ஈரோட்டின் நகரப்பகுதியில் வாகனங்களில் வலம் வந்தபடி, இறுதி நாள் பிரசாரத்தை நிறைவு செய்தனர்.
ஈரோடு லோக்சபா தேர்தலில் தி.மு.க.,வில் கே.இ.பிரகாஷ், அ.தி.மு.க., ஆற்றல் அசோக்குமார், த.மா.கா., பி.விஜயகுமார், நாம் தமிழர் கட்சி கார்மேகன் உட்பட பல்வேறு கட்சியினர் மற்றும் சுயேட்சைகள் உட்பட, 31 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். கடந்த, 31க்கு பின் தீவிரமடைந்த பிரசாரத்தில் வாகனங்களிலும், வீடுவீடாகவும் சென்று ஓட்டு சேகரித்தனர்.
தி.மு.க., கூட்டணியில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, எம்.பி., கனிமொழி, தமிழக காங்., தலைவர் செல்வபெருந்தகை, முன்னாள் மாநில தலைவர் இளங்கோவன், ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ உட்பட பலர் ஈரோடு தொகுதியில் பிரசாரம் செய்தனர்.
அ.தி.மு.க.,வில் முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்., - தே.மு.தி.க., பொதுச் செயலாளர் பிரேமலதா ஆகியோரும், த.மா.கா., வேட்பாளர் விஜயகுமாரை ஆதரித்து, த.மா.கா., தலைவர் வாசன், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை போன்றோர் பிரசாரம் செய்தனர். நேற்று மாலை, 6:00 மணியுடன் பிரசாரம் நிறைவடைந்ததால், நேற்று மாலை, 4:00 மணிக்கு பின் தி.மு.க., வேட்பாளர் கே.இ.பிரகாஷ், அமைச்சர் சு.முத்துசாமி, தமிழக காங்., முன்னாள் தலைவர் இளங்கோவன் ஆகியோருடன் நகரின் பல்வேறு பகுதியில் வாகன பிரசாரம் செய்து, வீரப்பன்சத்திரத்தில் நிறைவு செய்தார்.
அ.தி.மு.க., வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார், ஈரோடு நகரில் பல்வேறு பகுதியில் பிரசாரம் செய்து, பன்னீர்செல்வம் பூங்கா பகுதிக்கு வந்துவிட்டு, குமாரபாளையம் தொகுதி பள்ளிபாளையத்தில் முன்னாள் அமை ச்சர் தங்கமணியுடன் சேர்ந்து பிரசாரத்தை நிறைவு செய்தார்.
த.மா.கா., வேட்பாளர் விஜயகுமார், மாநகரப்பகுதியில் வாகனத்தில் வலம் வந்து, பொதுச் செயலாளர் விடியல் சேகர், மொடக்குறிச்சி பா.ஜ., எம்.எல்.ஏ., சி.கே.சரஸ்வதி ஆகியோருடன் ஜி.எச்., ரவுண்டானா பகுதியில் நிறைவு செய்தார்.
அத்துடன் தேர்தல் விதி
முறைப்படி, இக்கட்சி வேட்பாளர்கள் அமைத்திருந்த காரியாலயங்கள் அனைத்தும் மாலை, 6:00 மணிக்கு மேல் சேர், கட்சி கொடிகளை அகற்றி, அனைவரும் வெளியேறினர்.
மாலை, 4:00 மணி முதல் நகரின் பல்வேறு பகுதிகளில் வாகனங்கள், ஒலி பெருக்கியுடன் பரபரப்பாக காணப்பட்ட பிரசாரம், மாலை, 6:00 மணிக்கு ஓய்ந்து, அமைதியானது.

