/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தேங்காய் எண்ணெயை ரேஷனில் வழங்கணும்'
/
தேங்காய் எண்ணெயை ரேஷனில் வழங்கணும்'
ADDED : ஆக 02, 2024 01:55 AM
பெருந்துறை, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின், ஈரோடு மாவட்ட கூட்டம் பெருந்துறையில் நடந்தது.
தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க மாவட்ட அமைப்பாளர் கோபிநாத் தலைமை வகித்தார். மாநில தலைவர் மதுசூதனன், மாநில பொது செயலாளர் விஜய முருகன், தமிழ்நாடு விவசாய சங்க மாநில துணைத் தலைவர் டில்லி பாபு, மாவட்ட செயலாளர் முனுசாமி
பேசினர்.
மத்திய அரசு கொப்பரை தேங்காய் கிலோ, 140 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய வேண்டும். மாநில அரசு முழு தேங்காயை கிலோ, 50 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய வேண்டும். தேங்காய் எண்ணெயை தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் வழங்க வேண்டும். தென்னை சார் தொழில்களை உருவாக்கி, மதிப்பு கூட்டு பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள்
நிறைவேற்றினர்.