/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பஞ்., துணை தலைவரை தொடர்ந்து மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர் மீது புகார்
/
பஞ்., துணை தலைவரை தொடர்ந்து மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர் மீது புகார்
பஞ்., துணை தலைவரை தொடர்ந்து மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர் மீது புகார்
பஞ்., துணை தலைவரை தொடர்ந்து மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர் மீது புகார்
ADDED : செப் 04, 2024 09:06 AM
சென்னிமலை: சென்னிமலை யூனியனில், மகளிர் சுய உதவி குழு உருவாக்குதல், சேமிப்பு ஊக்குவித்தல், வங்கிகளில் கடன் பெற்று கொடுத்தல், குழுக்-களை பல்வேறு பயிற்சிகளில் பங்கேற்க செய்-வது உள்ளிட்ட பணிகள் மற்றும் மகளிர் வாழ்வா-தார திட்டம், கிராம வறுமை ஒழிப்பு சங்கம் உள்-ளிட்ட பணிகளை ஒருங்கிணைக்கும் வட்டார ஒருங்கிணைப்பாளராக சாந்தி உள்ளார். இவர் போலி கையெழுத்து போட்டு பணம் கையாடல் செய்ததாக, வாய்ப்பாடி ஊராட்சி துணை தலைவர் விஜயலட்சுமி, கலெக்டரிடம் நேற்று முன்தினம் புகார் கொடுத்தார்.இதை தொடர்ந்து மாவட்ட திட்ட அலுவலர் பிரியா, சென்னிமலைக்கு நேற்று வந்து விசார-ணையை தொடங்கினார். இதனால் விடுமு-றையில் சாந்தி சென்று விட்டார்.
தோப்புப்பாளையம் இந்தியன் வங்கியில், கூட்டு பொறுப்பு குழு கடன் வழங்குதலில், வங்கி மேலாளருக்கு தர வேண்டும் என்றுகூறி, ஐந்து லட்சம் ரூபாய் கடன் பெற்றுத்தந்த குழுவின-ரிடம், 25 ஆயிரம் ரூபாய் வசூலித்துள்ளார்.இந்தியன் வங்கியில் சாந்தி பரிந்துரையில், நான்கு கோடி ரூபாய்க்கு மேல், மகளிர் குழுக-ளுக்கு கடன் பெற்று கொடுத்துள்ளார்.இதற்கு எவ்வளவு தொகை பெற்றார் என்பது தெரியவில்லை. இதனிடையே சாந்தி அவரது சொந்த ஊரில், சுய உதவிக்குழு ஆரம்பித்து, வெள்ளோடு ஐ.ஓ.பி., வங்கியில் குழு கடன் பெற்-றுள்ளார். ஐந்தாண்டுகளாக கடனை செலுத்தாமல் நிலு-வையில் வைத்திருப்பதோடு, வாழ்ந்து காட்-டுவோம் திட்டத்தில், இந்த குழுவுக்கு அரசு மூலம் வந்த தொகையையும் அவரே வைத்து கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சாந்தி வகிக்கும் பொறுப்புகளில் விரிவான விசா-ரணை நடத்த, மகளிர் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்