/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அரவை கொப்பரை கிலோ ரூ.111.60க்கு கொள்முதல்
/
அரவை கொப்பரை கிலோ ரூ.111.60க்கு கொள்முதல்
ADDED : மார் 24, 2024 01:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, அரசின் ஆதார திட்டத்தில் அரவை கொப்பரை, 111.60 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும்.
அரசின் விலை ஆதார திட்டத்தில், முதல் தர அரவை கொப்பரை தேங்காய் ஒரு கிலோ, 111.60 ரூபாய் வீதம் பதிவு செய்த, தென்னை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படும். இதன்படி ஈரோடு மாவட்டத்தில் அவல்பூந்துறை, எழுமாத்துார், சிவகிரி, கொடுமுடி, சத்தியமங்கலம், கோபி, பெருந்துறை, வெப்பிலி, அந்தியூர், கவுந்தப்பாடி, பூதப்பாடி, பவானி, மைலம்பாடி ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் கொள்முதல் செய்யப்பட உள்ளது. தென்னை விவசாயிகள் தங்கள் அருகேயுள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பதிவு செய்யலாம்.

