நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம் : தாராபுரம் நகராட்சி பகுதியில், நேற்று மாலை, 5:00 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. ஆனால், 10 நிமிடங்களில் நின்றதால், மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில் இரவு, 8:20 மணிக்கு தொடங்கிய மழை, முக்கால் மணி நேரம் கொட்டி தீர்த்தது. இதனால் இதமான சூழல் உருவானதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் மீனாட்சிபுரம், உப்புத்துறைபாளையம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளிலும் மழை பெய்தது.

