/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
11ம் வகுப்பில் ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலைய மெட்ரிக் பள்ளி சாதனை
/
11ம் வகுப்பில் ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலைய மெட்ரிக் பள்ளி சாதனை
11ம் வகுப்பில் ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலைய மெட்ரிக் பள்ளி சாதனை
11ம் வகுப்பில் ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலைய மெட்ரிக் பள்ளி சாதனை
ADDED : மே 16, 2024 03:30 AM
ஈரோடு: பதினொன்றாம் வகுப்பில், ஈரோடு ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலைய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள், 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மாணவன் ரஞ்சித், 600க்கு 595 மதிப்பெண்கள் பெற்று முதலிடம், மாவட்டம் மற்றும் மாநிலத்தில் சிறப்பிடம் பெற்றுள்ளார். பிரனேஷ், 600க்கு 589 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம், தனுஷ்கா, 600க்கு 588 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பெற்று பெருமை சேர்த்துள்ளனர். தேர்வெழுதிய, 392 மாணவ மாணவிகளும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பெருமை சேர்த்துள்ளனர்.
மாநில அளவில் சிறப்பான மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று தந்த மாணவ, மாணவிகள், உறுதுணையாக இருந்த முதல்வர், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் பெற்றோர்களை கொங்கு கல்வி நிலைய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைவர் எம்.சின்னசாமி, தாளாளர் கே.செல்வராஜ், பொருளாளர் ஆர்.குணசேகரன், உதவி தலைவர்கள் எஸ்.கே.சோமசுந்தரம், ஆர்.எம். தெய்வசிகாமணி, உதவி செயலாளர் மு.மீனாட்சிசுந்தரம், உதவி பொருளாளர் வி.நாகராஜ் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், முதல்வர் டி.நதியா அரவிந்தன் ஆகியோர் கேடயம் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். கணினி அறிவியல் பாடத்தில், -23 பேர், கணிதம் பாடத்தில் நான்கு பேர், வேதியியல் பாடத்தில் மூவர், வணிகவியல் பாடத்தில் மூவர், கணினி பயன்பாடுகள் பாடத்தில் இருவர், பொருளியல் பாடத்தில் இருவர், இயற்பியல், கணக்கு பதிவியல், வணிக கணிதம் பாடத்தில் -தலா ஒருவர் 100க்கு100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தமிழில், 99 மதிப்பெண்கள் 5 பேர் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர் தேர்வு எழுதிய, 392 மாணவ மாணவிகளில், 550-க்கு மேல் 42 பேரும், 500 க்கு மேல் 140 பேரும், 450க்கு மேல் 260 பேர், 400க்கு மேல் 355 பேர் மதிப்பெண்கள் பெற்று பெருமை சேர்த்துள்ளனர். மேலும் 10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதிய, 1,012 பேரும் முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.