புன்செய்புளியம்பட்டி:நீலகிரி லோக்சபா தொகுதி தி.மு.க., வேட்பாளர் ஆ.ராசா, பவானிசாகர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட புன்செய்புளியம்பட்டி நகராட்சி, பவானிசாகர் ஒன்றிய கிராம பகுதிகளில் நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.
புளியம்பட்டியில் பிரசாரம் மேற்கொண்டபோது, கருப்பு பணத்தை மீட்டு மக்களின் வங்கி கணக்கில், 15 லட்சம் ரூபாய் போடுவேன் எனக் கூறிய பிரதமர் மோடியை கண்டிக்கிறோம் எனக்கூறி, 15 லட்சம் ரூபாய்க்கான போலி காசோலையை மக்கள் மத்தியில் காண்பித்தார். பிறகு ஆட்டுக்குட்டி கழுத்தில் மாலை போல் அதை அணிவித்தார்.நல்லுார் மற்றும் விண்ணப்பள்ளியில், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்காத பா.ஜ., அரசை கண்டித்து, எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், வேலை வாய்ப்பை ஏற்படுத்தாமல் இளைஞர்களை பா.ஜ., அரசு ஏமாற்றி விட்டதாக கூறி வடை சுட்டு, மக்களுக்கு வழங்கி பிரசாரத்தில் ஈடுபட்டார்.

