ADDED : ஆக 27, 2024 02:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை: சென்னிமலை, அரச்சலுார் ரோடு, பழக்காரர் வீதியை சேர்ந்தவர் நடேசன், 70; ரெடிமேட்ஸ் கடை நடத்தி வந்தார்.
கடந்த, 20ம் தேதி காலை வீட்டிற்கு சைக்கிளில் சென்றார். சென்னிமலை கிழக்கு புது வீதி ரோட்டில் திரும்பியபோது, லாரியின் பக்க-வாட்டு பகுதியில் மோதி விழுந்தார். லாரியின் பின் சக்கரம் ஏறி-யதில் பலத்த காயமடைந்தார். ஈரோடு தனியார் மருத்துவம-னையில் சிகிச்சை பெற்று வந்த நடேசன் நேற்று இறந்தார். இது தொடர்பாக பெரம்பலுார் மாவட்டத்தை சேர்ந்த லாரி டிரைவர் சூரியா மீது, சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்-ளனர்.

