/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
30 தனியார் பஸ்களில் ஏர் ஹாரன் அகற்றம்
/
30 தனியார் பஸ்களில் ஏர் ஹாரன் அகற்றம்
ADDED : செப் 04, 2024 09:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்: சத்தி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் குருசாமி, மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில், சத்தி பஸ் ஸ்டாண்டில், 50க்கும் மேற்பட்ட தனியார் பஸ்களில் வாகன சோதனை நேற்று நடந்தது.
இதில், 30 பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்தனர். மீண்டும் ஏர் ஹாரன்களை பயன்படுத்தினால், டிரைவரின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, 10,000 ரூபாய் அப-ராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.