/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பஸ் ஸ்டாண்டில் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
/
பஸ் ஸ்டாண்டில் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ADDED : ஏப் 25, 2024 05:06 AM
ஈரோடு: ஈரோடு பஸ் ஸ்டாண்டில், நடைபாதை ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று அகற்றினர்.
ஈரோடு மாநகராட்சி மத்திய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில், ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. பயணிகள் நடந்து செல்லும் நடைபாதை, முழுமையாக ஆக்கிரமிப்பு செய்து வியாபாரம் செய்து வருவதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் நடைபாதையில் நடந்து செல்ல முடியாமல், பஸ்கள் நிற்கும் ரேக்குகள் வழியாக செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இது தொடர்பாக புகார் வந்ததால், மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி நடைபாதை ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று காலை மாநகராட்சி அதிகாரிகள், பஸ் ஸ்டாண்ட் வளாகம் சென்று நடைபாதையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த பொருட்கள், ரேக்குகள் உள்ளிட்டவைகளை அகற்றி, குப்பை லாரிகளில் கொண்டு சென்றனர். நடைபாதைஆக்கிரமிப்பு தொடர்ந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.

