/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அரசியல் கட்சிகளின் பிளக்ஸ் பேனர் அகற்றம்
/
அரசியல் கட்சிகளின் பிளக்ஸ் பேனர் அகற்றம்
ADDED : மார் 31, 2024 04:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு லோக்சபா தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனும், அ.தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து, தே.மு.தி.க., பொது செயலாளர் பிரேமலதாவும், ஈரோட்டில் நேற்று முன்தினம் பிரசாரம் மேற்கொண்டனர்.
இதற்காக மாநகரில் பல்வேறு பகுதிகளில், தேர்தல் அதிகாரிகளின் அனுமதி பெற்று பிளக்ஸ் பேனர் வைத்தனர். பிரசாரம் முடிந்த நிலையில், அவற்றை அகற்றவில்லை. இதையடுத்து மாநகராட்சி ஆணையாளரும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவின்படி, 50க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள், பிளக்ஸ் பேனர்களை அகற்றும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.

