/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அனுமதி பெறாத விளம்பர பெயர் பலகைகள் அகற்றம்
/
அனுமதி பெறாத விளம்பர பெயர் பலகைகள் அகற்றம்
ADDED : ஜூலை 28, 2024 03:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி பகுதியில் பொது இடத்தில் பெயர் பலகை, பிளக்ஸ் பேனர் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
உரிய அனுமதி பெற்றால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இந்நிலையில் ஸ்வஸ்திக் கார்னரில் இருந்து வ.உ.சி., பூங்கா செல்லும் சாலையில் போக்குவரத்து இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு, பெயர் மற்றும் விளம்பர பலகைகளை, மாநகராட்சி ஊழியர்கள் நேற்று அகற்றினர். இதேபோல் வீரப்பன்சத்திரம் செல்லும் சாலையிலும் கடைகளின் பெயர் பலகை, பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டன

