ADDED : ஆக 06, 2024 08:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: அருந்ததியர் சமூகத்துக்கான தனி உள் இட ஒதுக்-கீட்டை, 6 சதவீதமாக உயர்த்தி வழங்க, சமூக நீதி மக்கள் கட்சி மற்றும் மாவீரன் பொல்லான் பேரவை நிறுவன தலைவர் வடிவேல் ராமன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்த அறிக்கையில் கூறியி-ருப்பதாவது: கடந்த, 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், நீதிபதி ஜனார்த்தனம் ஆணையம், அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்தது. எதிர்கா-லத்தில் மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்கலாம் எனவும் பரிந்-துரைத்தது. அதன் அடிப்படையில் தற்போதைய, 3 சதவீத தனி உள் இட ஒதுக்கீட்டை, 6 சதவீத-மாக உயர்த்தி வழங்க, தமிழக அரசு உரிய நடவ-டிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்-கையில் தெரிவித்துள்ளார்.