/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கட்டை பையில் வைத்து வீசப்பட்ட பெண் சிசு மீட்பு
/
கட்டை பையில் வைத்து வீசப்பட்ட பெண் சிசு மீட்பு
ADDED : ஜூலை 17, 2024 09:26 PM
ஈரோடு:ஈரோடு, சென்னிமலை சாலை, ரங்கம்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே சாலை ஓரம், குழந்தை அழும் குரல் கேட்டது. அப்பகுதியினர் சென்று பார்த்தபோது, ஒரு கட்டை பையில், பிறந்து சில மணி நேரமேயான பெண் சிசு அழுவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
தொப்புக்கொடி ரத்தம், உடலில் ரத்தங்கள் காயாமல் இருந்தது. சில மணி நேரத்துக்கு முன் பிறந்த குழந்தையை, அங்கு போட்டு சென்றதை உறுதி செய்தனர்.
ஈரோடு தாலுகா போலீசார், அக்குழந்தையை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். குழந்தைகள் மருத்துவர் பரிசோதித்து, தொப்புள் கொடியை அகற்றி, இன்குபேட்டரில் வைத்து சிகிச்சை வழங்கி வருகின்றனர். குழந்தை நலமாக உள்ளதாகவும், குழந்தையை யார் வீசி சென்றனர் என விசாரிப்பதாகவும், போலீசார் தெரிவித்தனர்.