/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வீட்டுக்குள் புகுந்த விஷப்பாம்பு மீட்பு
/
வீட்டுக்குள் புகுந்த விஷப்பாம்பு மீட்பு
ADDED : மே 02, 2024 12:13 PM
ஈரோடு: ஈரோடு, பழையபாளையம் இந்திரா காந்தி வீதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன், 50. இவரது வீட்டின் பாத்ரூமில் இருந்து வித்தியாசமான சத்தம் வருவதை கேட்டு, கதவை திறந்து பார்த்தார். அங்கு பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
ஈரோடு தீயணைப்பு வீரர்கள், மாதேஸ்வரன் வீட்டுக்கு விரைந்து வந்து, பாத்ரூமில் பதுங்கி இருந்த, 3 அடி நீளமுள்ள கொடி விஷத்தன்மை கொண்ட நாகப்பாம்பை உயிருடன் மீட்டனர். நிலைய அலுவலர் லெமர் தம்பையா, ஈரோடு வனத்துறை அலுவலகத்தில் பாம்பை ஒப்படைத்தார்.
ரூ.8.96 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை
ஈரோடு: ஈரோடு மாவட்டம், சிவகிரி ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு, 375 மூட்டைகளில் நிலக்கடலையை விவசாயிகள் கொண்டு வந்தனர். ஒரு கிலோ நிலக்கடலை, 63.56 முதல், 80.62 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 11,962 கிலோ எடை கொண்ட நிலக்கடலை, 8 லட்சத்து, 96,438 ரூபாய்க்கு விற்பனையானது.
தொட்டியில் விழுந்த கறவை மாடு மீட்பு
ஈரோடு: ஈரோடு, முத்தம்பாளையம் சூர்யா கார்டன் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி, 55, விவசாயி. இவரது தோட்டத்தில் கறவை மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று அவற்றை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது ஒரு கறவை மாடு, தோட்டத்துக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்படும் சிறிய அளவிலான தண்ணீர் தொட்டியில் விழுந்து சிக்கி கொண்டது. இதை பார்த்த கிருஷ்ணசாமி, மாட்டை மீட்க முயன்றும், முடியவில்லை. ஈரோடு தீயணைப்பு நிலைய அலுவலர் லெமர் தம்பையா தலைமையிலான வீரர்கள் கயிறு கட்டி, 20 நிமிடம் போராடி மாட்டை மீட்டனர்.

