/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆற்றில் தற்கொலைக்கு முயன்ற பெண் மீட்பு
/
ஆற்றில் தற்கொலைக்கு முயன்ற பெண் மீட்பு
ADDED : ஏப் 24, 2024 02:19 AM
ஈரோடு, ஏஈரோடு கருங்கல்பாளையம் கமலா நகரை சேர்ந்த பழனிசாமி மகள் தமிழ் செல்வி, 37. இவரது கணவர் சங்கர் கணேஷ். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
கருத்து வேறுபாட்டால் தமிழ் செல்வி கணவனை பிரிந்து வாழ்கிறார். தனக்கு புற்றுநோய் இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில், மன வருத்தம் அடைந்து இரு நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறினார். நேற்று மதியம் கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் தற்கொலை எண்ணத்துடன் இறங்கினார்.
அங்கிருந்தவர்கள், தமிழ் செல்வியின் நடவடிக்கையை பார்த்து சந்தேகமடைந்து அவரை பிடித்து கரைக்கு அழைத்து வந்தனர். கருங்கல்பாளையம் போலீசார் அங்கு வந்து, தமிழ் செல்வியை மீட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். பின்னர் அவரது உறவினர்களை வரவழைத்து அறிவுரை கூறி, தமிழ் செல்வியை அனுப்பி வைத்தனர்.

