/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நாய்களால் இறக்கும் ஆடுகள் இழப்பீடு கோரி தீர்மானம்
/
நாய்களால் இறக்கும் ஆடுகள் இழப்பீடு கோரி தீர்மானம்
ADDED : மார் 10, 2025 06:49 AM
சென்னிமலை: இ,கம்யூ., நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, சென்னிமலை ஒன்றிய பேரவை கூட்டம் நடந்தது. மாவட்ட குழு உறுப்பினர் தேவிப்பிரியா தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ரவி, மாவட்ட துணைச் செயலாளர் சின்னசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் பொன்னுசாமி பேசினர்.
ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில், தெருநாய்களால் நுாற்றுக்கணக்கான ஆடுகள் பலியாகியுள்ளன. நாய்கள் கடித்து இறந்த பெரிய ஆடுகளுக்கு தலா, 10 ஆயிரம்-, குட்டிகளுக்கு தலா, ௫,௦௦௦ ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். ஆடுகளை கடிக்கும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன