/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குட்டையில் சடலமாக கிடந்த ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்
/
குட்டையில் சடலமாக கிடந்த ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்
குட்டையில் சடலமாக கிடந்த ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்
குட்டையில் சடலமாக கிடந்த ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்
ADDED : பிப் 24, 2025 04:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்: தாளவாடி அருகே உள்ள இக்கலுாரில் உள்ள ஒரு குட்டையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் கிடப்பதாக ஆசனுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரித்தனர். இதில் தாளவாடி, அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த நாகலட்சுமி, 64, ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் என்பது தெரிய வந்தது. திருமணம் ஆகாத இவர், அடிக்கடி வீட்டை விட்டு வெளியே சென்று விட்டு இரண்டு, மூன்று நாட்கள் கழித்து வீட்டுக்கு வருவது வழக்கம்.
இந்த வகையில் சென்றவர், குட்டையில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். சத்தி அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்தனர்.