/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஒருவழிப்பாதையில் பயணிக்கும் வாகனங்களால் விபத்து அபாயம்
/
ஒருவழிப்பாதையில் பயணிக்கும் வாகனங்களால் விபத்து அபாயம்
ஒருவழிப்பாதையில் பயணிக்கும் வாகனங்களால் விபத்து அபாயம்
ஒருவழிப்பாதையில் பயணிக்கும் வாகனங்களால் விபத்து அபாயம்
ADDED : ஜூன் 10, 2024 01:31 AM
கோபி: கோபி அருகே சிங்கிரிபாளையம்-கொடிவேரி அணை பிரிவு வரை, பிரதான சத்தி சாலையில் விரிவாக்கப்பணி சில மாதங்களாக நடக்கிறது. இதற்காக அப்பகுதியில் பிரதான சாலையின் நடுவே சென்டர் மீடியன் வைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் தென்பகுதி வழியே சத்தியை நோக்கி பயணிக்கும் வழி சமீபத்தில் அடைக்கப்பட்டுள்ளது. இதனால் சத்தியை நோக்கி பயணிக்கும் வாகனங்கள் ஒரு வழிப்பாதையில்
பயணிக்கின்றன.
இதனால் கோபியை நோக்கி பயணிக்கும் வாகனங்களும், சத்தியை நோக்கி பயணிக்கும் வாகனங்களும், அசுர வேகத்தில் பயணிப்பதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒரு வழிப்பாதை என்பதால், 'வாகனங்கள் வேகத்தை கட்டுப்படுத்தி, கவனமாக பயணிக்கவும், என்ற வாசகம் அடங்கிய எச்சரிக்கை பலகையை, சிங்கிரிபாளையம் மற்றும் அக்கரை கொடிவேரி பகுதி
யில் வைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.